Newsதற்போதைய செய்திகள்தொழில்நுட்பம்

கூகுள் மேப்பில் புதிய வசதிகள்: ஏஐ இணைப்பு பலனளிக்குமா?

வழிகாட்டி செயலியான கூகுள் மேப்ஸ், புதிய அப்டேட்டுகள் மூலமாக பயனர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது.

கோடை கால பயணத்தை இலகுவாக்க கூகுள், இப்போது மூன்று அம்சங்களை புதிதாக இணைத்துள்ளது. புதிய அம்சங்கள் மட்டுமில்லாமல் புதிய தோற்றத்தையும் பயனர்கள் காண்பார்கள் என கூகுள் தெரிவித்துள்ளது.

மிக குறைவான டேப்களுடன் மினிமலிஸ்டிக் ஆக மாற்றப்பட்டுள்ளது கூகுள் மேப்ஸின் முகப்பு திரை. மேப்பில் இடத்தை எளிதாக அடையாளம் காண புதிய நிற பின்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

கூகுள் உள்ளூர் இணையத்தளங்களுடன் இணைந்து உணவகங்கள் குறித்த பரிந்துரைகள் போன்றவற்றை அளிக்கிறது.

பயனர்கள் தங்களுக்குப் பிடித்த இடங்களைத் தேடி அங்கு சிறப்பானவற்றை காண முடியும். அவர்களின் தேர்வுகளை சேமித்து வைத்துக்கொள்ளும் வசதியை கூகுள் வழங்கியுள்ளது. அந்த பட்டியலை சமூக வலைத்தளங்களில் பகிரவும் செய்யலாம். புதிய பட்டியல் என்கிற தேர்வின் மூலமாக இந்த பட்டியலை உருவாக்கலாம்.

மேலும், மக்களின் விருப்பமான இடங்கள் ட்ரெண்டிங் பட்டியலில் காண்பிக்கப்படும். இவை வாரந்தோறும் புதுப்பிக்கப்படும்.

அந்த குறிப்பிட்ட இடத்திற்கு போவதற்குமுன் அந்த இடத்தினை உணர முடியும் என கூகுள் சொல்கிறது.

கூகுளின் செய்யறிவு தொழில்நுட்பம் இடங்கள் குறித்த மதிப்பீடுகளையும் புகைப்படங்களையும் ஆராயும். பயனரின் தனித்துவ விருப்பத்தின் அடிப்படையில் அவர்களுக்கு வேண்டியதை காண்பிக்கும். உதாரணத்திற்கு பயனர் தொடர்ந்து வீகன் உணவகங்களாக தேடினால் அவர் செல்லும் இடங்களில் உள்ள அதுபோன்ற உணவகங்களை கூகுள் காண்பிக்கும்.

தற்போது அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள 40 நகரங்களில் இந்த மேம்படுத்தல் அறிமுகமாகியுள்ளது. விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source: DINAMANI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *