Newsஉலகம்தற்போதைய செய்திகள்

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

ஹமாஸ் பயங்கரவாதிகள், யூத பெண் ஒருவரின் உடல் மீது அமர்ந்து செல்கிற புகைப்படம் இந்தாண்டுக்கான சிறந்த புகைப்படமாக தேர்வு செய்யப்பட்டிருப்பது சமூக வலைத்தளங்களில் விவாதப்பொருளாகியுள்ளது.

இஸ்ரேலில் அத்துமீறி கொடூர தாக்குதல் நடத்திய ஹமாஸ் படையினர் அக்.7 அன்று நோவா இசைத் திருவிழாவில் பங்கேற்ற யூத பெண் ஒருவரை ஆடையின்றி அவரை மேல் அமர்ந்து செல்வதுபோல இருக்கும் புகைப்படம் அசோசியேடட் பிரஸ் சார்பில் வெளியிடப்பட்டது.

நீண்ட காலமாக புகைப்பட இதழியல் போட்டியை நடத்திவரும் அமெரிக்காவை மையமாக கொண்ட ‘டொனால்டு டபிள்யூ.ரெனால்ட்ஸ் ஜார்னலிஸம் இன்ஸிடியூட்’ இந்த விருதை அறிவித்துள்ளது.

22 வயதான ஷானி லெளக் என்கிற பெண், ஜெர்மனியைச் சேர்ந்தவர். ஜெர்மன் மற்றும் இஸ்ரேல் நாட்டின் குடியுரிமை பெற்றுள்ளவர்.

நோவா இசைத் திருவிழாவின்போது ஹமாஸ் தாக்கிய ஆரம்பகட்ட இடங்களில் இருந்து கடத்தி செல்லப்பட்டவர்களில் ஷானியும் ஒருவர்.

பிக்-அப் டிரக் வாகனத்தின் பின்புறம் அவரை வீழ்த்தி அவர் மீது ஹமாஸ் படையினர் நகரை வலம் வந்தனர். காஸா கொண்டு செல்லப்பட்டவர் பின்னர் இறந்ததாக அறிவிக்கப்பட்டது. அவரது உடல் காஸாவிலிருந்து திரும்ப தரப்படவில்லை. துன்புறுத்தி கொல்லப்பட்டிருக்கலாம் என குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

இந்த புகைப்படம் சமூக வலைத்தள பயனர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ‘சிதைந்த யூத வாழ்வின் மீதான அவமதிப்பு’ என பயனர் ஒருவர் கருத்திட்டுள்ளார்.

மற்றொருவர், ‘இது தவறானது மற்றும் மோசமானது’ என விமர்சித்துள்ளார்.

ஷானியின் குடும்பத்தினர் அவரது சந்தோஷமாக இருக்கிற படங்களை வெளியிட்டு ஷானி இப்படிதான் நினைவுக்கூரப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

Source: DINAMANI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *