Newsசெய்திகள்தற்போதைய செய்திகள்வெள்ளிமணி

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (மார்ச் 29 – ஏப்ரல் 4) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

குடும்பத்தில் சுப காரியங்கள் நடந்தேறும். எதிரிகள் அடங்கிப் போவார்கள். அந்தஸ்து உயரும். உடல் ஆரோக்கியமும், மன வளமும் சீரடையும்.

உத்தியோகஸ்தர்களிடம் மேலதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரிகளுக்கு நண்பர்கள், கூட்டாளிகளிடம் உதவிகள் கிடைக்கும். விவசாயிகளுக்கு சந்தையில் மதிப்பு அதிகரிக்கும்.

அரசியல்வாதிகள் அந்தஸ்தில் சற்று மேன்மை அடைவீர்கள். கலைத் துறையினர் மகிழ்ச்சியில் திளைப்பீர்கள். பெண்கள் பிள்ளைகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். மாணவர்கள் நற்பெயர் எடுப்பீர்கள்.

சந்திராஷ்டமம் – மார்ச் 30, 31.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய) 

வருமானம் திருப்தியாக இருக்கும். கடன்களைத் திரும்ப அடைப்பீர்கள். தொழிலில் அலைச்சல்கள் குறையும். தீயவர்களின் நட்பைத் துண்டிப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் கடினமாக உழைப்பீர்கள். வியாபாரிகள் கூட்டாளிகளுடன் இணக்கமாக இருப்பீர்கள். விவசாயிகளுக்கு கால்நடை பராமரிப்புச் செலவு கூடும்.

அரசியல்வாதிகள் முயற்சியைக் கூட்டிக் கொள்வதால், செல்வாக்கு உயரும். கலைத் துறையினர் திறமையை வெளிப்படுத்துவீர்கள். பெண்கள் யோகா, தியானம் மேற்கொள்வீர்கள். மாணவர்கள் மிகுந்த சிரமங்களுக்கு இடையே படிப்பீர்கள்.

சந்திராஷ்டமம் – ஏப். 1, 2.

மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

ஆன்மிகச் சிந்தனைகள் மேலோங்கும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். பயணங்களால் பலன்கள் உண்டு. கடன்களை வாங்க வேண்டாம்.

உத்தியோகஸ்தர்கள் பணவரவு, உயர்பதவி, பணியிட மாற்றத்தை எதிர்நோக்குவீர்கள். வியாபாரிகள் வாடிக்கையாளர்களைக் கவருவீர்கள். விவசாயிகள் மகசூல் பெருக்கத்தால் லாபம் பெறுவீர்கள்.

அரசியல்வாதிகள் கட்சியில் மாற்றம் கொண்டு வருவீர்கள். கலைத் துறையினருக்கு நிதானம் தேவை. பெண்கள் பிரச்னைகளில் மனம் தளர மாட்டீர்கள். மாணவர்களுக்கு வெற்றி நிச்சயம்.

சந்திராஷ்டமம் – ஏப். 3, 4.

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

உடல் நலம் சீராகும். மனதிலும் செயலிலும் புதிய உத்வேகம் ஏற்படும். தொழிலில் நிலவிய மந்த நிலை மாறும். பழைய கடன்கள் வசூலாகும்.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் பூசல் அதிகரிக்கும். வியாபாரிகள் புதிய கடைகளைத் திறப்பீர்கள். விவசாயிகள் நீர்வரத்து அதிகரிக்கக் காண்பீர்கள்.

அரசியல்வாதிகள் பயணங்களால் நன்மை அடைவீர்கள். கலைத் துறையினர் சிக்கன நடவடிக்கையைக் கையாள்வீர்கள். பெண்கள் குடும்பப் பிரச்னைகளால் சற்று மனம் தளர்வீர்கள். மாணவர்கள் தேர்வில் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.

சந்திராஷ்டமம் – இல்லை.

சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் முதல் பாதம் முடிய)

வெளிவட்டாரத்தில் எச்சரிக்கை தேவை. உடல் நலத்தில் அக்கறை எடுப்பீர்கள். தொழிலில் வெற்றி பெறுவீர்கள். பொருளாதார நிலை மேன்மையடையும்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் சுமுகமாக நடப்பீர்கள். வியாபாரிகளுக்கு கூட்டுத் தொழிலில் ஒற்றுமை ஓங்கும். விவசாயிகளுக்குத் தானிய உற்பத்தி அதிகரிக்கும்.

அரசியல்வாதிகளுக்கு அனுகூலமான திருப்பங்கள் உண்டு. கலைத் துறையினர் நினைத்த காரியங்களை முடிப்பீர்கள். பெண்களுக்குப் பிரச்னைகள் நீங்கும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் – இல்லை.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

பெற்றோர் வழியில் சில நன்மைகள் உண்டாகும். மனக் குழப்பங்கள் அகலும். போட்டிகளைச் சமாளிப்பீர்கள். ஸ்பெகுலேஷன் துறைகளில் நல்ல லாபத்தைக் காண்பீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் வேலைகளைக் குறிப்பிட்ட நேரத்தில் முடித்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். வியாபாரிகள் புதிய சந்தைகளை நாடி வியாபாரத்தைப் பெருக்குவீர்கள்.

அரசியல்வாதிகள் தொண்டர்களைப் பரிசீலிப்பீர்கள். கலைத் துறையினருக்குப் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெண்கள் குடும்பத்தில் பிரச்னைகள் இருக்காது. மாணவர்கள் விளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் – இல்லை.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்

தோற்றப் பொலிவில் மாற்றங்கள் ஏற்படும். எதிர்பாராதச் செலவுகள் உண்டு. பேச்சில் அனுபவ அறிவு மேம்படும். கோபத்தைக் குறைத்துக்கொண்டு நன்மைகளை அடைவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் மனதைக் கட்டுப்படுத்தவும். வியாபாரிகள் போட்டியாளர்களால் சிறிது தொல்லைகளைச் சந்திப்பீர்கள். விவசாயிகளுக்கு மகசூல் சுமாராக இருக்கும்.

அரசியல்வாதிகள் எதிர்க்கட்சியினரிடமிருந்து ஒதுங்கி இருப்பீர்கள். கலைத் துறையினர் நினைத்த காரியங்களை முடிப்பீர்கள். பெண்களுக்கு வருவாய் உண்டு. மாணவர்கள் நல்ல பலன்களைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் – இல்லை.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

பணத்தட்டுப்பாடு நீங்கும். குடும்பப் பிரச்னைகள் குறையும். மனதில் நிம்மதி ஏற்படும். சொத்து விஷயங்களில் ஆதாயம் உண்டாகும்.

உத்தியோகஸ்தர்கள் ஊதிய உயர்வைப் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு எதிரிகளால் தொல்லை ஏற்படாது. விவசாயிகள் புதிய பாசன வசதிகளை உண்டாக்கிக் கொள்வீர்கள்.

அரசியல்வாதிகளின் மதிப்பு உயரும். கலைத் துறையினருக்கு பாராட்டுகள் குவியும். பெண்கள் முக்கிய பிரச்னைகளில் சமரசமாகச் செல்வீர்கள். மாணவர்கள் மனதை ஒருமுகப்படுத்தி படித்து, நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் – இல்லை.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

புதிய வீடு, நிலம் வாங்கும் சிந்தனை உண்டாகும். சுபகாரிய முயற்சியைத் தொடங்குவீர்கள். உடன்பிறந்தோரால் நன்மைகள் உண்டாகும்.

உத்தியோகஸ்தர்கள் திறமைகளை வளர்த்துக்கொள்வீர்கள். வியாபாரிகள் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். விவசாயிகளுக்கு நல்ல வருவாய் கிடைக்கும்.

அரசியல்வாதிகள் தொண்டர்களை அனுசரித்து நடப்பீர்கள். கலைத் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெண்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைய காண்பீர்கள். மாணவர்கள் உடற்பயிற்சிகளை மேற்கொள்வீர்கள்.

சந்திராஷ்டமம் – இல்லை.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

குடும்பத்தில் குதூகலம் தாண்டவமாடும். தொழிலில் லாபம் கிடைக்கும். மனதுக்கினிய பயணங்களைச் செய்வீர்கள். குழந்தைகளால் பெருமை அடைவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் போனஸ் பெறுவீர்கள். வியாபாரத்தில் முயற்சிக்கேற்ற அங்கீகாரமும், ஆதாயமும் கிடைக்கும். விவசாயிகள் இழுபறியான பணிகளை முடிப்பீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். கலைத் துறையினருக்கு தொழில் அபிவிருத்திக்கான உதவிகள் கிடைக்கும். பெண்கள் பொறுமையுடன் நடப்பீர்கள். மாணவர்களின் முயற்சிகள் ஈடேறும்.

சந்திராஷ்டமம் – இல்லை.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

உடல் ஆரோக்கியமும், மன வளமும் மேம்படும். உறவினர்களை அனுசரித்து நடப்பீர்கள். தனித்தன்மை வெளிப்படும். பெற்றோரின் ஆதரவு சிறக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு கொடுக்கல்} வாங்கல் சீராகும். விவசாயிகள் விளைச்சலை மேம்படுத்துவீர்கள்.

அரசியல்வாதிகள் தொண்டர்களை அரவணைத்துச் செல்வீர்கள். கலைத் துறையினர் பிறரை ஆலோசித்து முடிவெடுப்பீர்கள். பெண்கள் குழந்தைகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். மாணவர்கள் நல்ல நண்பர்களுடன் பழகுவீர்கள்.

சந்திராஷ்டமம் – இல்லை.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

குடும்பத்தில் மனக் கசப்பு நீங்கும். பழைய கடன்களை அடைப்பீர்கள். நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். பிறருக்கு உதவிகளைச் செய்வீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு வழக்கு விஷயங்கள் சாதகமாக முடியும். வியாபாரிகளுக்கு நல்ல யோகம் உண்டாகும். விவசாயிகளுக்கு முயற்சிக்கேற்ற வருமானம் கிடைக்கும்.

அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்திடம் விவாதங்களைத் தவிர்க்கவும். கலைத் துறையினருக்குப் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெண்களுக்கு உடன்பிறந்தோர் உதவியாக இருப்பார்கள். மாணவர்களின் திறமைகள் வெளிப்படும்.

சந்திராஷ்டமம் – மார்ச் 29.

Source: DINAMANI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *