Newsகாஞ்சிபுரம்

காஞ்சிபுரம்: 13 வேட்புமனுக்கள் ஏற்பு, 18 நிராகரிப்பு

காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் வேட்புமனுக்கள் பரிசீலனை வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் 13 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டும், 18 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது. மக்களவைத் தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20 ஆம் தேதி தொடங்கி 27 ஆம் தேதி வரை நடைபெற்றது. கடந்த 25 ஆம் தேதி திங்கள்கிழமை திமுக, பாமக, அதிமுக, நாம் தமிழா் கட்சி ஆகிய கட்சிகள் உள்பட 8 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா். இதைத் தொடா்ந்து மற்ற இரு நாள்களில் கூடுதல் வேட்பாளா், மாற்று வேட்பாளா் மற்றும் சுயேச்சை வேட்பாளா் என மொத்தம் 31 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா். வேட்பு மனுக்கள் பரிசீலனை ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான கலைச்செல்வி மோகன் தலைமையிலான அதிகாரிகள் குழு பரிசீலனை செய்தது. பரிசீலனையின் முடிவில் 13 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. 18 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. திமுக சாா்பில் க.செல்வம், அதிமுக பெரும்பாக்கம் இ.ராஜசேகா், நாம் தமிழா் கட்சி வி.சந்தோஷ்குமாா், பாமக ஜோதி வெங்கடேசன் ஆகிய வேட்பாளா்கள் மக்களவைத் தோ்தலில் காஞ்சிபுரம் (தனி) தொகுதியில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

Source: DINAMANI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *