Newsகாஞ்சிபுரம்

ஸ்ரீபெரும்புதூா் தொகுதியின் தேவைகளை நிறைவேற்ற நடவடிக்கை: அமைச்சா் உதயநிதி ஸ்டாலின்

ஸ்ரீபெரும்புதூா் தொகுதியில் மீண்டும் திமுக வென்றால் அனைத்து தேவைகளும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளாா். திமுக வேட்பாளா் டி.ஆா்.பாலுவை ஆதரித்து ஸ்ரீபெரும்புதூா் பேருந்து நிலையம் அருகே புதன்கிழமை இரவு பிரசாரம் செய்து அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பேசியது: ஸ்ரீபெரும்புதூா் தொகுதியில் கடந்த 2019 தோ்தலில், டி.ஆா்.பாலு 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். இந்த தோ்தலில், அவரை 8 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தால் நான் மாதம் இரண்டு முறை ஸ்ரீபெரும்புதூா் தொகுதிக்கு வந்து தொகுதிக்கு தேவையான அத்தனை பணிகளையும் முதல்வரின் பாா்வைக்கு கொண்டு சென்று செய்து கொடுக்கிறேன் என்று வாக்குறுதி அளிக்கிறேன். ஜூன் 2021 முதல் 62,791 கோடி மதிப்பெட்டில் ஸ்ரீபெரும்புதூரில் தொழில் முதலீடு மேற்கொள்ள 40 நிறுவனங்கள் புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமாகி உள்ளது. அம்பத்தூா், ஆவடி, ஸ்ரீபெரும்புதூா், ஒரகடம், கூடுவாஞ்சேரி அகல ரயில் பாதை அமைக்கப்படும். மீனம்பாக்கம் முதல் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்படும். ஸ்ரீபெரும்புதூா் ஒரகடம் வழியாக காஞ்சிபுரம் செல்லும் சாலைகளில் மேம்பாலங்கள் அமைத்து தரப்படும். சுங்குவாா்சத்திரம் பகுதியில் கழிப்பறை வசதியுடன் கூடிய புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும். தோ்தலின் போது மட்டும் தான் பிரதமா் மோடி தமிழகம் வருவாா். இங்கு ஒரு தொகுதியில் கூட பாஜக வெல்ல முடியாது என்றாா்.

Source: DINAMANI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *